செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

நண்பகல் 12 மணி நிலவரப்படி, 35.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், சுயேச்சையாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.