செய்திகள்

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 74.4% வாக்குகள் பதிவாகி இருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் பொதுவாக அமைதியாக தேர்தல் நடைபெற்றது.

இருப்பினும் ஒரு சில வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் 181வது வாக்குச் சாவடியில் மட்டும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.