செய்திகள்

ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு

ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 1.50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு வெளியான ஜூன் 30-ம் தேதி மாலையே அவர் தலைமைச் செயலகம் வந்து பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக, சட்டப்பேரவை தலைவர் தனபால் முன்னிலையில் 10.45 மணி அளவில் பதவியேற்றுக் கொள்கிறார்.