செய்திகள்

ஆறுமுகன் தொண்டமானின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு 29-05-2015 அன்று கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து இப்பூஜை வழிபாடுகள் மலையகமெங்கிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை கொட்டகலை கோவில் மண்டபத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி இணைப்பாளரும், நுவரெலியா மாவட்ட இளைஞர் சம்மேளத்தின் பொருளாலருமான ராஜமணி பிரசாந்த் தலைமையில் 50ற்கும் மேற்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ராம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவி அனுஷியா சிவராஜா, இ.தொ.கா அரசியல் அமைப்பாளர் திரு.ராஜன் நகர கமிட்டி சிரேஷ்ட உறுப்பினர் எஸ். பெரியதுரை, இ.தொ.கா வின் பிராந்திய இணைப்பாளர் சிவஞானம், இ.தொ.கா முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம், நகர வர்த்தகர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.

DSC_0132 DSC_0135 DSC_0142 DSC_0144 DSC_0146 DSC_0156 DSC_0163 DSC_0172 DSC_0173 DSC_0180 DSC_0181 DSC_0191 DSC_0197 DSC_0211 DSC_0227