செய்திகள்

ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணை காப்பாற்றிய வீரர் உயிரிழப்பு

கினிகத்தேனை வழியாக ஓடும் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற விமானபடை வீரர் பெண்ணை காப்பாற்றி விட்டு தான் உயிரிழந்துள்ளார்.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் 16.04.2016 அன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 கினிகத்தேனை வழியாக ஓடும் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 36 வயது மதிக்கதக்க பெண் நீரில் அடித்துச்செல்லும் நிலையை கண்ட விமானபடை வீரர் பெண்ணை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.

 இந்த நிலையில் பெண்ணை காப்பாற்றிய அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த விமானபடை வீரர் கினிகத்தேனை யட்டிபேரிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க எஸ்.டீ.மனுக்க இஷான் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 இவ்வாறு உயிரிழந்த வீரரின் சடலம் தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 அதேவேளை சம்பவத்தில் உயிர் தப்பிய குறித்த பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிக்சசைகளை மேற்கொண்டு வருகின்றார்.

n10