செய்திகள்

ஆலங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

அநுராதபுரம் குருநாகல் வீதியில் ஆலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்றும் பெண்னொருவரும் உயிரிழந்துள்ளனர்.
சிறிய ரக உழவு இயந்திரமும் பவுசர் வண்டியொன்றும் மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்களில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 12 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பொசன் நிகழ்வொன்றுக்காக சென்று குறித்த உழவு இயந்திரத்தில் இன்று அதிகாலை வீடுகளுக்கு அவர்கள் திரும்பிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.