செய்திகள்

ஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்

இலங்கையில் இன்று காலை வதந்தியொன்று மக்களிடையே பரப்ப பட்டதால் மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர்.
இலங்கையில் சில ஆலயங்களின் பெயர்களை கூறி அந்த ஆலயங்களின் கோபுரம் , கலசம் உடைந்து விழுந்துள்ளதாகவும் வீடுகளில் ஆண் பிள்ளைகளுக்கு சரியில்லை எனவும் வதந்திகள் பரப்பி விடப்பட்திருந்தன.
ஆனால் உண்மையில் அவ்வாறாக எந்த கோயிலிலும் எந்த சம்பவமும் நடக்கவில்லை.
மக்களுக்கு இவ்வாறாக வதந்திகளை பரப்பியவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். -(3)