செய்திகள்

ஆலயத்திற்கான போக்குவரத்தில் ஈடுபடுத்த புதிய இ.போ.ச.பஸ் யாழ் வந்தது: தடுத்தார் டக்ளஸ்

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய போக்குவரத்திற்காக இ.போ.ச.பஸ்சை சேவையில் ஈடுபடுத்தும்படி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இ.போ.ச. தலைவரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கமைய அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து குடாநாட்டிற்கு நேற்று புதிய பஸ் ஒன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனை அறிந்த டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அதனை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்த வேண்டாம் என இ.போ.ச. வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளருக்குக் கட்டளையிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.