செய்திகள்

ஆலயம் உடைக்கப்பட்டு – பணம் மற்றும் நகைகள் திருட்டு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் 06.06.2015 அன்று கதவுகள் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த பெறுமதிமிக்க விளக்குகள் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் மற்றும் ஆலயத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் ஊடாக இன்று காலை சென்ற சிறுவர்கள் ஆலயத்தின் கதவு உடைத்து இருப்பதனை கண்டு பெரியோர்களுக்கு தெரிவித்ததையடுத்து தோட்ட மக்கள் ஆலயத்துக்கு சென்று பார்த்துள்ளனர.;
இச்சம்பவம் தொடர்பாக ஆலயத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை லிந்துலை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Uvakelle Estate Temple (2) Uvakelle Estate Temple (3)