செய்திகள்

ஆளில்லா ஊருக்கு அழகு பாழ்

மருத்துவர் சி.யமுனானந்தா

யாழ் மாவட்டத்தின் சனத்தொகை ஆறு இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சமாக குறையும் அயாயம் உள்ளது. ஏனெனில் பெருமளவானோர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயரும் நிலையில் உள்ளனர். கடந்த கால புலம்பெயர்வுகள் இல்லாவிடின் யாழ் மாவட்டத்தில் தற்போது இருக்க வேண்டிய சனத்தொகை 16 இலட்சம் மக்கள் இருந்நிருப்பர். இவ்வாறே இலங்கையின் வடக்கு கிழங்கு மாகாணங்களில் சுமார் 45 இலட்சம் தமிழ் மக்கள் தொகை வெறுமையாகி உள்ளது.

இந் நிலையில் எமது பிரதேசத்தின் சமுகக்கட்டமைப்பை அதன் நாகரிகத்துடன் நிலை நிறுத்துவதற்கு கடந்தகாலங்களில் இலங்கையில் இருந்து மேற்குலத்திற்கு புலம் பெயர்ந்தவர்களில் ஒரு தொகையினரை மீளவும் எமது பிரதேசத்தில் குடியமர்த்தல் வேண்டும்.

மேலும் இந்தியாவில் யுத்த சூழலால் புலம் பெயர்ந்தவர்களில் ஒரு தொகையினரையும் எமது பிரதேசத்தில் குடியமர்த்தல் அவசியம். அடுத்து கடந்த 200 ஆண்டுகளாக மலையகத்தின் எழுச்சிக்கு உதவிய மக்கள் பிரஐh உரிமைச்சட்டம், சிறிமா சாஸ்திரி உடன்படிக்கை என்பவற்றால் இந்நியாவிற்கு அனுப்பபட்டனர் அம் மக்களின் சந்ததியில் குறித்த தொகையினரை எமது பிரதேசத்தில் குடியமர்த்தல் அவசியம். மேலும் மலையக மக்களில் ஒரு பகுதியினரை எமது பிரதேசத்தில் குடியமர்த்தல் அவசியம். வடக்கு கிழக்கில் தற்போது உருவாகி உள்ள புலம்பெயர்வு நெருக்கடிகளுக்கு இத்தகைய மாற்று உபயத்தினை சமூகவியலாளர்கள் சிந்தித்தல் இன்றியமையாததாகும்.