செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்; இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.இந்நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்கவீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது களமிறங்கினர்.

இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.அத்டுது வந்த வீரர் டேவிட் மாலன் 6 ரன்களுக்கும், கேப்டன் ஜோ ரூட் டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர்.பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்து தடுமாறியது.

உணவு இடைவேளைக்கு பின் நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து, ஓலி போப் – ஜோஸ் பட்லர் ஜோடி ரன்களை சேர்த்தது. இந்நிலையில், பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து போப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும், ஹசீப் ஹமீது 25 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். மேலும், ஜோஸ் ஹாசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாடி வருகிறது.(15)