செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் வருகிற 8-ந்தேதி கார்டிப்பில் தொடங்குகிறது.

இதற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் 27 வயதான அடில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி வருமாறு:- அலஸ்டயர் குக் (கேப்டன்), ஆடம் லைத், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், ஸ்டீவன் பின்.