செய்திகள்

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் உடன் மோத விரும்பும் ஜான்சன்

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் யுத்தம் என்று கருதப்படும் ஆஷஸ் தொடர் 8-ந்தேதி தொடங்குகிறது. கடந்த ஆஷஸ் தொடரை 0-5 என இங்கிலாந்து இழந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் தங்களது சொந்த இடத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த அந்த அணி தீர்மானித்துள்ளது.

பொதுவாகவே எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் வார்த்தை சண்டையில் ஈடுபடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஷஸ் தொடர் என்றால் சொல்லவா வேண்டும்?

ஒரு நேரத்தில் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட இங்கிலாந்து அணியில் பிளின்டாப், கெவின் பீட்டர்சன் ஆகியோர் இருந்தார்கள். தற்போதுள்ள இளம் வீரர்கள் அவர்களுக்கு ஈடுகொடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அடுத்த பிளின்டாப் என்று எதிர்பார்க்கப்படும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மேற்கிந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது சாமுவேல்சிடம் கடும் வாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஸ்டோக்ஸ் தான் சரியான ஆள். ஆகவே அவருக்கு எதிரான வார்த்தை போரில் ஈடுபட விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை அனைத்து டெஸ்ட்களிலும் தோல்வியடைச்செய்ய இவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. இதேபோல் இந்த வருடமும் இவரது பந்துவீச்சை ஆஸ்திரேலியா அதிக அளவில் நம்பி இருக்கிறது.

Ben-Stokes-exchanges-words-with-Mitchell-Johnson

இந்நிலையில்தான் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடுகிறார். அதே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் செயல்படுகிறார். இதனால் அவரைப் பற்றிதான் நாங்கள் கடந்த தொடரின் போது பேசிக்கொண்டிருந்தோம். இங்கிலாந்து அணியில் சரியாக போட்டிப்போடக்கூடிய ஒரே வீரர் இவர்தான்.

விராட் கோலி மைதானத்தில் கடும் போட்டியாக திகழ்வார். அவரைப்போல்தான் ஸ்டோக்ஸ் செயல்படுகிறார். இவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். டெஸ்ட் போட்டியில் இதுபோன்ற காரசாரமான வாக்குவாதத்தை பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள். ஏன குறிப்பிட்டுள்ளார்.