செய்திகள்

ஆஸஷ் தொடரில் ஹாசில்வுட், ஜோ ரூட் ஜொலிப்பார்கள்: மெக்ராத் சொல்கிறார்

வரும் ஆஸஷ் தொடரில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வுட்டும், இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு ஜாம்பவானான மெக்ராத் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கார்டிஃபில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஹாசில்வுட்டுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் அதில் சிறப்பாக பந்து வீசுவார். போட்டியில் அவரது செயல்பாடு சிறப்பாக உள்ளது. தனது விளையாட்டு அருமையாக உள்ளது என்று அவருக்கு தெரியும்.
root2
டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள அவர் மிகுந்த வேட்கையுடன் உள்ளார். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து சுவிங், பவுன்ஸ் செய்கிறார். இதை பார்க்கும்போது சரியான வழியில் செல்கிறார் என்றே தோன்றுகிறது” என்றார்.
24 வயதாகும் ஹாசில்வுட் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளார். சராசரி 19.08 ஆகும். தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்ற அவர் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.