செய்திகள்

ஆஸியும் அரையிறுதியில்

அடிலெய்ட் ஓவலில் இன்று இடம்பெற்ற பாக்கிஸ்தானிற்கு எதிரான காலிறுதியில் ஆறு விக்கெட்களால் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 49.5 பந்துகளில்213 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாக்கிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ்சொகையில் 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிஸ்பா 34 ஓட்டங்களையும் பெற்றனர். ஆஸி அணி சார்பில் ஹசெல்வூட் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிஆரம்பத்தில் 3 விக்கெட்களை 59 ஓட்டங்களுக்குள் இழந்து சற்று தடுமாறியது.எனினும் ஸ்மித் 65 மற்றும் வட்சனின் 64 ஓட்டங்களின் உதவியுடனும், மக்ஸ்வெல் அதிரடியாக 29 பந்துகளில் பெற்ற 44 ஓட்டங்கள் காரணமாகவும் ஆஸி அணி 33 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து அரையிறுதியை உறுதிசெய்தது.