செய்திகள்

ஆஸி ஓபன் டெனிஸ் போட்டியில் முரே , இரினா, ஷரோபா காலிறுதிக்குள் நுழைவு

மெல்போர்னில்  நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டியில் நேற்றைய தினம் ஸ்கொட் வீரர் அன்டி முர்ரே 6-4, 6-7(5-7), 6-3, 7-5 என்னும் செட் கணக்கில் அவரை எதிர்த்தாடிய பல்கேரியன் வீரரான கிரிகோர் டிமித்ரோவை வென்று கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார். இது இவர்  வெற்றிபெரும் 16வது பெரிய கால் இறுதி போட்டி என்பது குறிபிடத்தக்கது.

bouchard

பெண்களுக்கான போட்டியில் நேற்றைய தினம் கனடிய வீராங்கணையான ஐகெனி போச்சார்ட் அவரை எதிர்த்து விளையாடிய ரோமானிய வீராங்கணையான இரினா-கமேலியா பெகுவை 6-1, 5-7, 6-2 என்னும் செட் கணக்கில் வென்று கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார்.மற்றொரு பெண்களுக்கான போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த மரியோ ஷரபோவா 6-3, 6-0 என்னும் நேர் செட் கணக்கில் அவரை எதிர்த்து விளையாடிய சீன வீராங்கணை பெங் ஷுஐயை வென்று கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார்.

Sharapova