செய்திகள்

ஆஸி செல்ல முற்பட்ட 78 பேர் கிரிந்தை கடற்பரப்பில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 78 பேர் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஹம்பாந்தோட்டை, கிரிந்த கடற்பரப்பில் வைத்து பிடிபட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா தெரிவித்தார்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கரையிலிருந்து 65 கடல் மைல்தொலைவில் வைத்து இவர்களை கைது செய்தனர். இவர்களிடையே 17 சிங்களவர், 59 தமிழர் மற்றும் இரு படகு ஊழியர்கள் உள்ளனர்.

கைதானவர்களை காலி துறைமுகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க ப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோரை தடுக்க கடந்த காலத்தில் கடற்படை தேடுதல் நடவடிக்கைகளை அதிகரித்திருந்தது. இதனால் அவுஸ்திரேலியா செல்வோர் தொகை குறைவடைந்திருந்தது. அண்மைக் காலத்தில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கூடுதல் தொகை இதுஎன கடற்படை பேச்சாளர் கூறினார்.