செய்திகள்

ஆஸி முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கருத்தை தவிடு பொடியாக்கி அசத்திய கோலி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் நேற்று மோதின.

முன்னதாக, இந்த போட்டி குறித்து நேற்று முன் தினம் கருத்து தெரிவித்த வீராட் கோலி, “கடினமாக சூழ்நிலைகள் தான் என்னிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் என்னை குறிவைத்தால் அது அவர்களுக்கு எதிராகதான் முடியும்.” என்று தெரிவித்திருந்தார்.

வீராட் கோலியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆஸ்திரேலியாவின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் “உலகக் கோப்பையின் முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை(வீராட் கோலி) மிகவும் ரசித்தேன்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.