செய்திகள்

ஆஸ்கர் நாயகனாக லியானார்டோ டிகாப்ரியோ தேர்வு – சிறந்த நடிகை பிரயி லார்சன்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும்  ஆஸ்கர் விருது வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தார்.
இந்த விழாவில், மெக்சிகோவை சேர்ந்த பிரபல இயக்குனரான அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு (Alejandro Gonzalez Inarritu) இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “தி ரெவெனன்ட்” (The Revenant) படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள லியோனார்டோ டிகேப்ரியோ-வுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. மேலும், அப்படத்தின் இயக்குனர் அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு-வுக்கு சிறந்த இயக்குனர் விருதும் கிடைத்துள்ளது.

dicaprio-xlarge
பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள ‘தி ரெவெனன்ட்’ படத்தில், ரத்தத்தை உறையவைக்கும் மைனஸ் டிகிரி குளிரில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ முரட்டுக்கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து, அங்கிருந்து தப்பிவரும் கதையம்சமும், கதைக்கேற்ப பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
தாய்க்கும் மகளுக்குமிடையிலான மென்மையான பந்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “ரூம்” (Room) என்ற படத்தில் தாய்மையின் உள்ளுணர்வுகளை தனது சிறப்பான நடிப்புத் திறனால் மெருகூட்டி, வெளிப்படுத்திய பிரையி லார்சன் (Brie Larson) சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘ஸ்பாட் லைட்’ படம் வென்றுள்ளது.
மேலும் விருதுகளின் விபரம்:

சிறந்த திரைக்கதை- ஸ்பாட் லைட்
சிறந்த ஆடை வடிவமைப்பு -ஜென்னி பவன்
தயாரிப்பு வடிவமைப்பு:  காலின் காப்சன் லிசா, லிசா தாம்சன்
சிற்ந்த ஒப்பனை: சிகையலங்காரம் விருது மேட் மேக்ஸ்ப்யூரி ரோட் படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த தழுவல் திரைக்கதை: சார்லஸ் ரெண்டால்ப் ஆடம் மெக்கே ( பிக் ஷாட் திரைப்படம்)
சிறந்த துணை நடிகை : அலிசியா விகாண்டர் ( தி டேனிஷ் கேர்ள்)
சிறந்த படத்தொகுப்பு: மர்கரெட் சிக்ஸஸ்
சிறந்த ஒளிப்பதிவாளர் : இமானுவல் (பெஸ்கி தி ரெவனண்ட்)

brie-larson-dress-1500x1000
சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த சவுண்ட் எடிட்டிங்- மார்க் மாங்கினி மற்றும் டேவிட் விபைட் (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த சவுண்ட் மிக்ஸிங்- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ – (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த விஷுவல் எஃபக்ட்- எக்ஸ் மெஷினா
சிறந்த பின்னணி இசை – எனியோ மோரிகான் (தி ஹேட்புல் எயிட்)
சிறந்த பாடல் – ஸ்பெக்டர் (ரைட்டடிங் ஆன் தி பால் பாடலுக்காக ஜிம்மி நேப்ஸ், சாம் ஸ்மித் ஆகியோர் வென்றனர்)
சிறந்த குறும்படம் – ஸ்டட்டரர்
சிறந்த வெளிநாட்டு படம் – சன் ஆஃப் சால் (ஹங்கேரி மொழி)
சிறந்த ஆவண குறும்படம் – எ கேர்ள் இன் த ரிவர்
சிறந்த ஆவணப்படம்  – ஏமி
சிறந்த அனிமேஷன் படம் – இன்சைடு அவுட்சிறந்த அனிமேஷன் குறும்படம் – பியர் ஸ்டோரி