செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ளப்பெருக்கு! 5 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளபெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன், காபுல்ட்சர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிக்சி 5 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சாலைகளில் அடித்து செல்லப்பட்ட காரிகளில் இருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அங்கு புயல் தாக்கியதை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.