செய்திகள்

அவுஸ்திரேலியா அரசியலில் குதித்துள்ள ஈழத் தமிழர்: பசுமைக்கட்சி சார்பில் போட்டி

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளரா தேர்தலில்  களமிறங்குகிறார். மேற்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெட் (Prospect) தொகுதியில் தாம் போட்டியிடுவதாக செல்வன் அறிவித்துள்ளார்.

2000 ஆண்டு புகலிடம் தேடி அவுஸ்திரேலியா வந்த செல்வன், தற்போது வென்வொர்த்வில்லி (Wentworthville) பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார்.

பசுமைக் கட்சியில் சேர்ந்தது குறித்து செல்வன் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்தவர்களில் பசுமைக் கட்சியின் அரசியல்வாதிகள் முதன்மையானவர்கள். ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் சார்பில் பசுமை கட்சியில் போட்டியிடுகின்றேன்.

மார்ச் 3ஆம் மாதம் நடைபெறும் இந்த தேர்தலில் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக தேர்தலில் போட்டியிடுகிறேன். கிறீன் கட்சியானது இலங்கை தமிழர்கள் விடயம் மற்றும் அகதிகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுக்கின்ற காரணத்தினால் தான் கிறீன் கட்சியை ஆதரித்து தேர்தலில் போட்டியிடுகிறேன்.

01தற்போது ஆவுஸ்திரேலியாவில் தமிழர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் வருகின்ற காலங்களில் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கின்ற சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. அது போன்று இளம் சமுதாயத்தினரும் வருகின்ற காலங்களில் அரசியலில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும்.

அது போன்று அகதிகள் விடயத்திலும் தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் தான் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பாகவும் ஈழ அகதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தனது குரல் ஒலிக்கும்.

எமது இலக்கை அடைய வேண்டும் என்றால் மற்றைய நாடுகளை போன்று அவுஸ்திரேலியாவிலும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எமது மக்களின் நலன் சார்ந்த விடயங்களை செயற்படுத்த தனக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் இதற்கு முன் ஈழத் தமிழ் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது, இரண்டாவதாக ஈழத்தமிழர் ஒருவர் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.