செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 888 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 23 லட்சத்து 23 ஆயிரத்து 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சத்து 68 ஆயிரத்து 631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் 5 லட்சத்து 95 ஆயிரத்து 381 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 747 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 217 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 525 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 888 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளதால் இங்கிலாந்து மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.(15)