செய்திகள்

இங்கிலாந்து அணிக்கு மிகவும் அவமானகரமான தோல்வி

டிம் சவுதியின் அற்புதமான பந்துவீச்சு மற்றும் பிரென்டன்மக்கலம் 18 பந்துகளில் பெற்ற அரைசத்தை பயன்படுத்தி நியுசிலாந்து அணி இன்று இடம்பெற்ற உலககிண்ண போட்டியில் இங்கிலாந்தை வெலிங்டனில் மிக இலகுவாக எட்டுவிக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது.
முதலில் துடுப்பபெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து அணி 33 ஓவர்களிலேயே 123 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
டிம் சவுத்தியின் அவுட்சுவிங் பந்துவீச்சையும், நியுசிலாந்தின் அற்புதமான களத்தடுப்பையும் எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி தனது 7 விக்கெட்களை வெறுமனே எட்டு ஓவர்களுக்குள் இழந்தது.சவுத்தி 33 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார்.
தனது மூன்றாவது ஓவரில் பெல்லின் விக்கெட்களை சாய்த்த அவர்,பின்னர் மூயின் அலியை மிகவும் நுட்பமாக திட்டமிட்டு முதலில் பவுன்சரை வீசி பின்னர் யோக்கர் பந்து மூலம் சாய்த்தார்.
பின்னர் இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் அற்புதானபிடியொன்றின் மூலம் வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் மீண்டும் பந்துவீச வந்த சௌத்தி அடுத்த ஏழு விக்கெட்களையும் இலகுவாக சாய்த்தார், ஜோ ரூட் இறுதி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.

அதன் பின்னர் மக்கலம் உலககிண்ணப்போட்டிகளில் மிகவேகமான அரைச்சதத்தை பெற்று(18பந்துகளில்) அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார்,மக்கலத்தின் 21 பந்துகளில் பெறப்பட்ட 77 ஓட்டங்களில் எழு சிக்சர்கள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஸ்டுவர்ட் புரோட்டின் முதல் ஓவரில் 18 ஓட்டங்களை பெற்ற அவர் பின்னின் இரு ஓவர்களில் 49 ஓட்டங்களை பெற்றார், இதில் ஓரு ஓவரிலேயே 4 சிக்சர்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. நியுசிலாந்து அணி தனது வெற்றி இலக்கை 45 நிமிடங்களிலேயே பெற்றதும் குறிப்பிடத்தக்கது.