செய்திகள்

இங்கிலாந்து, இலங்கை அணிகளில் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?

குரூப்1-ல் இந்த ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற இங்கிலாந்து அணி, அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரைஇறுதியை எட்ட முடியும். இலங்கை அணிக்கும் இதே நிலைமை தான். தனது முதல் லீக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று 2 புள்ளியுடன் இருக்கிறது.

இதில் இலங்கை அணி தோல்வியை தழுவினால், ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். நடப்பு சாம்பியன் என்ற போதிலும் இலங்கை அணி தற்போது அச்சுறுத்தும் அணியாக இல்லை. எனவே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.