செய்திகள்

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை நிலைகுலையச்செய்த கிங்ஸ்

1979 ம் ஆண்டு இரண்டாவது உலககிண்ண போட்டியின் இறுதியாட்டம் இங்கிலாந்துடன் ஆரம்பமாகி 90 நிமிடங்களுக்குள்; முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறத் தொடங்கியது.
கொலிஸ் கிங்ஸ் களத்தில் நுழைந்தவேளை அணி 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றிருந்தது.அவ்வேளை மறுமுனையில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மற்றயை வீரர் சேர் விவ் ரிச்சட்ஸ்
அதன் பின்னர் அங்கு இடம்பெற்றது ஆச்சரியப்பட வைக்கும் அற்புதமான வானவேடிக்கை என தெரிவிக்கலாம், இந்த வானவேடிக்கையை நிகழ்த்தியவர் ரிச்சட்ஸ் அல்ல கொலிஸ் கிங் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது. ர்pச்சட்ஸ் வெறுமனே பார்வையாளராகவேயிருந்தார்.
கிங்ஸ் களத்தில் நுழைந்தவேளை எங்களுக்கு தாராளமாக ஓவர்கள் உள்ளன நிதானமாக விளையாடு என ரிச்சட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் அந்த மனோநிலையிலிருக்கவில்லை.தான் எதிர்கொண்ட முதல்பந்தை- இயன் பொத்தமுடையது கட் செய்து கிங்ஸ் நான்கு ஓட்டங்களை பெற்றார்.
பொத்தம் பந்து வீசியபோது அவரது முகத்தில் ஓருவகை சிரிப்பு காணப்பட்டது, கிங்ஸ் அடித்துநொருக்க துவங்க அது காணமற்போய்விட்டது என நினைவுகூர்ந்தார் ரிச்சட்ஸ்
எனினும் கிங்சை நிதானமாக விளையாடச்செய்வதற்கான முயற்சிகளை ரிச்சட்ஸ் மேற்கொண்டார், அது சரிவராமல்போகவே அதனை கைவிட்டார்.
இரண்டு பேரும் அடித்துநொருக்குவதை விட அவரே அதனை செய்யட்டும் என விட்டுவிட்டு நான் நிதானமாக விளையாடினேன் என்றார் ரிச்சட்ஸ்
மதிய உணவு இடைவேளையின் போது அணி 4 விக்கெட்களுக்கு 125 ஓட்டங்களை பெற்றிருந்தது, அதன் பின்னரே அனல்பறக்கும் ஆட்டத்தைகிங்ஸ் வெளிப்படுத்தினார்,வெயின் லார்கின்சை இரண்டு முறை மைதானத்திற்கு வெளியே விரட்டினார்,பொய்கொட்டின் பந்திலும் சிக்சர் அடித்தார்.
இதற்கு மேல் என்னசெய்வதென்ற நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக இங்கிலாந்து அணி தலைவர் மைக்பிரெர்லி தெரிவித்தார். பகுதி நேர பந்துவீச்சாளர்களை அவ்வேளை பயன்படுத்தியதற்காக அவர் மீது பின்னர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் கிங்ஸ் அன்றிருந்த மனோநிலையில் எவராலும் அவரை கட்டுப்படுத்தியிருக்க முடியாது, அவர் இறுதியாக ஆட்டமிழந்த வேளை நாங்கள் வெற்றிபெறுவோம் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது என்கிறார் மேற்கிந்திய அணியின் தலைவர் கிளைவ்லொயிட்
ஓரு கட்டத்தில் ரிச்சட்ஸ் 90 களிலிருந்த வேளை கிங்ஸ்50 ஓட்டங்களை பெறாத நிலையிலிருந்தார். ஆனால் ரிச்சட்ஸ் அதே 90 களில் இருந்தவேளையே கிங்ஸ் 66 பந்துகளில் 88ஓட்டங்களை பெற்றார், இருவரும் 77 நிமிடங்களில் 138 ஓட்டங்களை பெற்றனர்.
கிங்ஸ் ஆட்டமிழந்த பின்னர் ரிச்சட்ஸ் தனது பாணியில் விளையாடி 138 ஓட்டங்களை பெற்றார்.