செய்திகள்

இங்கிலாந்தையும் குறிவைக்கும் கொரோனா – ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் பலி

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சை தொடர்து வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 60 ஆயிரத்து 733 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், நேற்றூ ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 938 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால், இங்கிலாந்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.(15)