செய்திகள்

இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் 100 நாட்களுக்குள் மீளக் குடியேற்றறப்படுவர்: அமைச்சர் சுவாமிநாதன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் மீளக்குடியேற்றபபடுவார்கள் என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா. பிரதிநிதி ஒருவருடனான சந்திப்பின்போதே அமைச்சர் சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சம் அகதிகள் தற்போது தமிழக முகாம்களில் உள்ளனர். இதனைவிட 26 ஆயிரம் உள்நபட்டடில் இடம்பெயாந்த நிலையல் உறவினர் இல்லங்களிலும் முகாம்களிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மீளக்குடியர்த்தப்பட வேண்டும். இதற்கன நடவடிககைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் சுவாமிநான் தெரிவித்தார்.

வலிகாமம் மற்றும் சம்பூர் பகுதிகளில் இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே இருக்கின்றரர்கள். இவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேன்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியேற்றுவதுதான் தமது திட்டம் எனவும், இதற்காக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சில பிரதேசங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.