செய்திகள்

இடி மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக சேதம்! – மூவர் படுகாயம் (படங்கள்)

மலையகப் பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.

இதனால் இம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 07.05.2015 பெய்த மழையுடன் கூடிய இடி மின்னல் காரணமாக லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் மின்னல் தாக்கத்தால் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

அத்தோடு வீட்டில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் திரு. பரமநாதன் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் இடம்பெற்ற போது இவரின் வீட்டில் இருந்த மூவர் காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் இருவர் வீடு சென்றதாகவும் ஒருவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Lightning Impact (1)

Lightning Impact (2)

Lightning Impact (3)

Lightning Impact (4)

Lightning Impact (5)

Lightning Impact (6)

Lightning Impact (7)

Lightning Impact (8)

Lightning Impact (9)

Lightning Impact (10)