செய்திகள்

இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து தந்தையும் மகனும் துடிதுடித்துப் பலி: யாழ்.சுன்னாகத்தில் பரிதாபம் (படங்கள்)

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோயிலடிக்கு அண்மையிலுள்ள வெள்ளவாய்க்கால் வீதியில் இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 30 வயது தந்தையும் அவரது 9 வயது மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (04.5.2015) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று திங்கட்கிழமை பிற்பகல் கடுமையான மழை கொண்டிருந்த வேளையில் சுன்னாகத்திலுள்ள சலூனுக்கு சைக்கிளில் தலைமயிர் வெட்டுவதற்காகச் சென்று விட்டுச் சுன்னாகம் ஐயனார் கோயிலுக்கு அண்மையிலுள்ள வெள்ள வாய்க்கால் வீதியால் தமது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த வீதியில் முழங்காலுக்கு மேல் வெள்ளம் காணப்பட்டமையால் தந்தையார் தனது மகனை சைக்கிளால் இறக்கி நடாத்தி அழைத்து வந்துள்ளார்.

அப்போது குறித்த பகுதியில் காணப்பட்ட தென்னைமரத்தில் இடி விழுந்ததால் மின்சார வயர் அறுந்து திடீரெனக் கீழே விழுந்துள்ளது.

இதன் போது ஏற்பட்ட மின் தாக்கத்தில் சிக்கி இருவரும் வெள்ளத்துக்குள் மயங்கிச் சரிந்துள்ளனர். அதன் பின்னர் 2.30 மணியளவில் அப் பகுதிப் பொதுமக்கள் இருவரையும் மீட்டு அம்புலன்ஸ் மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களைப் பரிசோதித்த வைத்தியர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இடி விழுந்தமையால் தென்னை மரம் கருகிக் காணப்பட்டதுடன் மின்சார வயரிலிருந்து மின்கடத்தப்பட்டுக் கொண்டுமிருந்தது. இதனால் அப் பகுதிப் பொதுமக்களும் வீதியால் பயணிப்பவர்களும் பெரிதும் அச்சமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக சுன்னாகம் மின்சார சபைக்கும்,பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் மின்சார சபையினர் அசிரத்தையுடன் செயற்பட்டதாகவும்,பிற்பகல் 4 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் சிக்கி மல்லாகம் தெற்குக் கல்லாரைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பாலச்சந்திரன் றஜீவன்(வயது-30), அவரது ஒரேயொரு ஆசை மகனான சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் தரம்-4 இல் கல்வி பயிலும் றஜீவன் நிருஜன் (வயது-9) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தால் மல்லாகம் தெற்கு கல்லாரைப் பகுதி முழுவதும் சோகமயமாகக் காணப்படுகிறது.

IMG_2974

IMG_2971

IMG_2967

IMG_2963

IMG_2961

IMG_2947

IMG_2948

IMG_2950

IMG_2951

IMG_2959

IMG_2940

IMG_2939

IMG_2937

11193315_828854100518010_8201742664889870806_n