செய்திகள்

இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்

இலங்கையில் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்துக்; சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 300 ரூபாவால் குறைத்தல், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தல் உள்ளிட்ட பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக திறைசேரியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.