செய்திகள்

இணுவிலில் நடைபெற்ற குருதிக்கொடை

யாழ்.இணுவில் ஸ்ரீராம் ஐpம் நிறுவனத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற குருதிக் கொடை.
யாழ்.இணுவில் கே.கே.எஸ்.வீதியில் அமைந்துள்ள ஸ்ரீராம் ஜிம் நிறுவனத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை குருதிக் கொடை இடம்பெற்றது.

காலை 9 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை நிறுவன மண்டபத்தில் நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று குருதி பெற்றுக் கொண்டனர்.குறித்த குருதிக் கொடை முகாமில் மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த 36 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி வழங்கியதாக இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ம.பிரதீபன் தெரிவித்தார்.

ஆறாவது வருடமாக இவ்வாறான குருதிக் கொடை நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துவதாகவும் அதுமாத்திரமன்றித் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் குருதிக்கான தேவை ஏற்படும் போதெல்லாம் தாமாக முன்வந்து இரத்தம் வழங்குவதாகவும் மேற்படி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களிலும் உயிர் காக்கும் தமது உன்னத பணி தொடமருமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ்.நகர் நிருபர்-

image (12) image (13) image (14)