தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக சாமிமலை பிரதேசத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சாமிமலை பிரதேசத்தில் இயற்கை அனா்த்தங்களால் பாதிக்கப்பட்ட மின்னா தோட்டத்தில் 10 வீடுகளுக்கும், லெட்புரூக் தோட்டத்தில் 25 வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர். பி. திகாம்பரம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதையடுத்து அவரால் பெயர்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லினை நாட்டி உரையாற்றியிருந்தார். இந்த நிகழ்வில் பல பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.