செய்திகள்

இதுதான் குட்டி ‘தல’யின் பெயர்

அஜித் தனது இரண்டாவது குழந்தைக்கு ‘ஆத்விக்’ என்று பெயரிட்டு இருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் – ஷாலினி தம்பதிக்கு மார்ச் 2-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சந்தோஷத்தில் திழைத்த அஜித் ரசிகர்கள் #KuttyThala என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதை டுவிட்டரில் டிரெண்டாக்கினர்.

குழந்தை பிறந்து 50 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் அதன் பெயர் பற்றிய விவரம் எதுவும் வெளியிடப் படாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அஜித் குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் அக்குழந்தைக்கு ஆத்விக் என்று பெயரிட்டு இருப்பதாக அஜித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆத்விக் என்றால் ‘தனித்துவம்’ என அர்த்தமாம். அஜித் – ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே அனுஷ்கா என்ற பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.