செய்திகள்

இதுவே நான் பார்க்கப்போகும் இறுதி உலக கிண்ணப்போட்டி: மார்ட்டின் குரோ உருக்கம்

ஞாயிற்றுக்கிழமை இரசிகர்களால் முழுமையாக நிரம்பிவழியப்போகின்ற மைதானத்தில் அவுஸ்திரேலியாவும்-நியுசிலாந்தும் மீண்டும்யுத்தத்தில் ஈடுபடப்போகின்றன. இம்முறை இந்த இரு தேசங்களும் கடும்போட்டியாளர்களாக, பகையாளிகளாக களத்தில் குதிக்கவுள்ளன. எங்களது இரு நாடுகளிற்கும் பொதுவான வரலாற்றை இந்த போட்டி மேலும் அர்த்தபூர்வமானதாக்கப்போகின்றது.

ஞாயிற்றுக்கிழமை சகோதரர்களில் ஓருவர் மற்றவரை தோற்கடிக்கலாம். இந்த சகோதரர்களில் ஓருவன் என்ற வகையில் நான் பெருமிதமடைகிறேன்.எந்த வித சந்தேகமுமின்றி இதுவே எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணமாக அமையும்.நியுசிலாந்திற்கும் அவ்வாறான தருணமாகவே இது விளங்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

martin-crowe_g_2369050b

கடந்த ஆறு தடவைகள் நாங்கள் இந்த உயரத்தை தொடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தற்போதை அணிக்கு அடித்தளமாகவும்,தாங்கள் செய்யவேண்டிய பணி என்னவென்பது குறித்த விழிப்புணர்வையும் அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.  கடந்த காலத்தின் வலிகள் இல்லாமல் நியுசிலாந்த அணி நிச்சயமாக இந்த புனித பயணத்தை நோக்கி முன்னேறியிருக்காது.கடந்த காலத்தின் நீண்ட தூர பயணம் இல்லாமல் மக்கலத்தின் வீரர்கள் இவ்வளவு பாரிய சாதனையை செய்வதற்கான துணிச்சல், உத்வேகம், தன்னம்பிக்கை ஆகியவற்றை பெற்றிருக்கமாட்டார்கள்.

1975 ம் ஆண்டிலிருந்து இது ஓரு கூட்டு முயற்சியே, நாளையும் அவ்வாறானதாகவே அமையப்போகின்றது. 1975 இல் நியுசிலாந்து வீரர்கள் தங்கள் கரங்களில் பற்றிக்கொண்டு ஓட தொடங்கிய பட்டனை அவர்கள் துணிச்சலுடன் முன்கொண்டு செல்வதை பார்ப்பதற்காக நன்றியுடன் நான் ஞாயிற்றுக்கிழமை மைதானம் வருவேன்.

தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகமுக்கிய தருணத்திலுள்ள இரு அணிதலைவர்களும் என்னை ஈர்க்கின்றனர்.அவர்களும்,அவர்களது பயிற்றுவிப்பாளர்களும்,அணியின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர்.ஆனாலும் இறுதியில் அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் அணித்தலைவர்களே.

மக்கலமும், கிளார்க்கும் ஓரே மாதிரியான பின்னணியை கொண்டவர்கள்,நவீன கிரிக்கெட் உலகில் அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வீரர்கள் அவர்கள்.அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்காக தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர்கள், செயல்களுக்காக அல்ல.

அவர்களுக்கு கிரிக்கெட் உலகில் அடுத்து என்ன நடைபெறப்போகின்றது என்பது தெரிந்துள்ளது, அதனை அறியும் திறன் அவர்களிடமுள்ளது.அதேபோன்று அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் தெரிந்துள்ளது.அந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் இருவரும் தயங்குவதில்லை.

களத்திலும் வெளியேயும் கிரிக்கெட் மாறிக்கொண்டிருக்கும் ஓவ்வொரு நிமிடமும்அவர்கள் அந்த அழுத்தங்களை கையாளும் விதம் என்னை ஆச்சரியப்படவைத்துள்ளது.

மக்கலம் ஏற்கனவே தனது தேசத்தின் இதயத்தை வென்றுவிட்டார், அவர் தவிர்க்கமுடியாதவராக மாறிவிட்டார். கிளார்க்கை பொறுத்தவரை வெல்வதற்கு இன்னமும் ஒரே போட்டியேயுள்ளது. ஆஸிக்கு ஐந்தாவது உலககிண்ணத்தை அவர் வென்று கொடுத்தால் அவர்கள் அவரை சிறப்பாக புரிந்துகொள்வார்கள். பலருக்கு அவரது ஆட்டமுறை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர் நீண்ட பாராட்டுக்குரியவர். எனது ஆபத்தான உடல்நிலை என்னை மேலும் பல போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதிக்காது,ஆகவே இதுவே இறுதி உலககிண்ணமாக இருக்கலாம்,எனினும் நான் இந்த போட்டியுடன் நிம்மதியடைவேன்.

Martin-Guptill-Ross-Taylor_1757304

எனது வாழ்கையில் எனக்கு கிடைக்காத இரு புதல்வர்களான ரொஸ் டெய்லர் மற்றும் மார்ட்டின் கப்டில் கறுப்புடையில் தங்கள் சகாக்களுடன் விளையாடுவதை பார்ப்பது மெய்மறக்கச்செய்ய கூடிய விடயமாக அமையும்.அன்று முழுவதும் நான் என் கண்ணீரை கட்டுப்படுத்துவேன், நான் சுவாசிப்பதற்கு சிரமப்படலாம், ஓரு பதட்டமான பெற்றோர் போல காணப்படுவேன்.