செய்திகள்

இது கடைசி அல்ல இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. பொதுச் செயலாளர்

உலகை உலுக்கி வரும் ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்கிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.இந்நிலையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும். கொரோனாவைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும். உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.(15)