செய்திகள்

இதொகாவின் அறிவுறுத்தலுக்கமைய இன்றுமுதல் மலையக மக்கள் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக கூறி மலையக தொழிலாளர்களை இன்றுமுதல் மெதுபணி போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென இதொகா கூறியுள்ளது.

சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதொகா நான்குமுறை பேசியும் கம்பனிகள் இணங்கவில்லை என்றும் அதற்காக இந்த போராட்டம் நடத்தப்படவேண்டும் என இதொகாவின் செயலாளர் முத்துசிவலிங்கம் கூறியுள்ளார்