செய்திகள்

இந்தியத் தூதுவர் சின்ஹாவுடன் ரணில் திடீர்ச் சந்திப்பு

ranil-00ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையிலும் நேற்று பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச்சந்திப்பின்போது எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

இருந்தபோதிலும், தேர்தலுக்கு ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.  ஐ.தே.க.வின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரியவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.