செய்திகள்

இந்தியப் பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி செல்வார்

இந்தியாவிற்கான விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தகயாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன் திருப்பதிக்கும் செல்வாரென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு ஜனாதிபதி இந்திய விஜயத்தை மேற்கொள்வுள்ளார்.

இலங்கையில் பாதுகாவலராக விஷ்ணுவை பௌத்த சிங்களவர்கள் கருதுகின்றனர். அத்துடன் விஷ்ணுவின் அவதாரமாக வெங்கடேஸ்வரப் பெருமானை ஏற்றுக்கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன திருப்பதிக்கு ஒரு தடவை சென்று வழிபட்டிருந்தார். அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பல தடவைகள் திருப்பதிக்குச் சென்றுள்ளார்.