செய்திகள்

இந்தியாவிடம் தோல்வி: கேப்டன் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கம்?

டி20 உலக கோப்பையுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சாகித் அப்ரிடி நீக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த சிலர் கூறுகையில் “ அப்ரிடியின் ஆட்டம் மற்றும் கேப்டனாக அவரது செயல்பாடு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. தற்போது நடந்து வரும் டி20 உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறாவிட்டால் கேப்டன் பதிவியில் இருந்து நீக்கப்படலாம். ஏன் ஒரு வீரராக கூட அவர் அணியில் நீடிப்பது கடினம்.
ஊடகங்களில் அவர் வெளியிட்ட கருத்துகள் குறித்தும் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. பயிற்சியாளர் வாக்கர் யூனிஸ்க்கு பதிலாக வெளிநாடு அல்லது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். மேலும் தேர்வு குழுவும் கலைக்கப்பட்டு புதிய தேர்வு குழு தேர்வு செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. நேற்றைய போட்டியில் சுழல்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கியது, மாலிக், ஹபிஸ்க்கு முன்பாக பேட்டிங் செய்தது என அப்ரிடியின் செயல்பாடு பாகிஸ்தானில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிள்ள நிலையில் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.