செய்திகள்

இந்தியாவின் புற்றுநோய் தலைநகராக மாறிவரும் பெங்களூர்

இந்தியாவின் புற்றுநோய் தலைநகராக பெங்களூர் மாறி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் பரவக்கூடிய நோய்களை விட பரவாத நோய்களால் மக்கள் பலியாகும் அபாயம் அதிகம் உள்ளது. பரவாத நோய்களால் மக்கள் இறக்கும் அபாயம் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 1995ம் ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டு வரையிலான காலத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அபாயம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் நகர்ப்புற ஆண்களுக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது 3 மடங்கும், சர்க்கரை நோய் ஏற்பட்டது நான்கு மடங்கும் அதிகரித்துள்ளது” . என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.