செய்திகள்

‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம் : சில குறிப்புகள்

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தவர் மருத்துவ மாணவி நிர்பயா. நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உத்வின், ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த ஆவணப் படம் பற்றிய சி ல ஆக்க அம்சங்கள்:

1.கட்சிகளுக்கு அப்பால் நிலவும் அரசமைப்பு, நிறுவனங்கள், இவைகளைக் கேள்வியெழுப்பும் சிவில் சமூக உறுப்பினர்கள் மீதான இவைகளது வன்முறை குறித்தது ஆவணப்படம்.

2. இந்திய தந்தைமை வழிச் சமூக அமைப்பை அதனது ஆழ்தளத்தில் விசாரணை செய்கிறது ஆவணப்படம்.

3. நேற்றும் இன்றும் நாளையுமான பிஜேபி-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பெண்களின் உடல்கள் மீதான கலாச்சாரக் காவல் திட்டங்களுக்குக் கடுமையான சவாலாக இருக்கிறது ஆவணப்படம்

[youtube url=”https://www.youtube.com/watch?v=qUvlwmIfyx0″ width=”500″ height=”300″]

 

பிரச்சினைக்குரிய அம்சங்கள் :

1.குற்றவாளிகள் தொடர்பான நொய்மையான ஒரு அணுகுமுறையைப் படம் கடைப்பிடிக்கிறது.

2. பாலியல் வல்லுறவை ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக இந்தியப் பொதுச்சமூக ஆண்மனம் மட்டுமல்ல அரசும் அரசு நிறுவனங்களும் கையாள்கிறது. காஷ்மீர், கையர்லாஞ்சி, ஈழம் எனவும் இப்பிரச்சினை விரிகிறது. அருந்ததிராயின் கட்டுரை இங்கு ஞாபகம் வருகிறது.

3. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதி வழங்குதலை இந்தப்படம் குலைக்கும் சாத்தியம் உண்டு.

4. வல்லுறவுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணும் காரணம் என்பதை வழக்குரைஞர்களின், குற்றவாளிகளின் உறவினர்கள் வழி முன்வைக்கும் ஆவணப்படம், மறுதலையில் குற்றவாளிகளின் வறுமையான வாழ்நிலையை விஸ்தாரமாகச் சித்தரிப்பதன் வழி. குற்றமிழைத்தவர்கள் மீதான அனுதாபத்தைப் பார்வையாளரிடம் தூண்டுகிறது.

5. பாலியல் வல்லுறவைத் தொடர்ந்து இந்தியாவெங்கிலும் மேல்மட்ட அரசியல்வாதிகளிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் எழுந்த அவமானகரமான பேச்சுக்கள் அது தொடர்பான விவாதங்கள் எதுவும் படத்தில் இல்லை.