செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள்போட்டியில் ஆறு விக்கெட்களால் வெற்றிபெற்று பங்களாதேஸ் ஓரு நாள்தொடரை கைப்பற்றியுள்ளது.
வெற்றிபெறுவதற்கு 200 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் 54 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து பங்களாதேஸ் தனது இலக்கை அடைந்துள்ளது.
சகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றார்,இதன் மூலம் பங்களாதேஸ் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கும் தகுதி பெற்றுள்ளது.