செய்திகள்

இந்தியாவிற்கு மேலும் வலுசேர்க்கும் திறமையான களத்தடுப்பு

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டிவிலியர்சும்,டு பிளசியும் 68 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை,டிவிலியர்ஸ் ஜடேஜாவை சுவீப்பர் கவர் திசைக்கு அடித்தார்,மோகிட் சர்மா மிகவேகமாக ஓடிவந்தார்,பந்தை தடுத்து எறிந்தார்,அதன் போது அவர் சற்று தடுமாறினாலும் அவர் எறிந்த பந்து நேராக டோனியின் கரங்களுக்கு வந்தது- ஆபத்தான இரண்டாவது ஓட்டத்தை பெற முயன்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் ஆட்டமிழந்தார்.

206627.4ஆட்டத்தின் போக்கை மாற்றியது அந்த ரன்அவுட் என பின்னர் இரு அணித்தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தொலைவிலிருந்து ரன்அவுட் செய்வது அடிக்கடி இடம்பெறாத விடயம்.ஆனால் அதேபோட்டியில் அது மீண்டும் இடம்பெற்றது டிவிலியர்சின் ஆட்டமிழப்பிற்கு பத்து ஓவர்களுக்கு பின்னர் மில்லரை உமேஸ்யாதவ் ஆட்டமிழக்கச்செய்தார்.டீப் ஸ்குயர்லெக் திசையிலிருந்து அவர் எறிந்த பந்து ஆபத்தான மில்லரை வெளியேற்றியது.

மிகப்பெரிய மைதானமான எம்சிஜியில் இந்தியா தென்னாபிரிக்காவை தனது களத்தடுப்பால் வென்றது. இது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம்.இந்திய அணியின் உள்வட்ட களத்தடுப்பாட்ட வீரர்கள் எப்போதும் ஆபத்தானவர்களாக காணப்பட்டனர்.துடுப்பாட்ட வீரர்கள் ஓரு ஓட்டத்தினை பெறுவதை கடினமானதாக்கினர்.இந்திய அணி கட்ச்களை தவறவிடாமல் பிடித்தது,தொலைவில் களத்தடுப்பில் ஈடுபட்டவர்கள் 100 மீற்றர்கள் வரை ஓடி பவுண்டரிகளை தடுத்தனர்,மூன்றை இரண்டாக்கினர், ரன்அவுட்களை செய்தனர்.

CRICKET-WC-2015-IND-RSAகளத்தில் கூட்டு முயற்சி

சமி தனது ஓவரை முடித்த பின்னர் களத்தடுப்பிற்கு சென்றிருந்தார். ஆனால் முதல் பந்தே அவர் துரத்தி தடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார், அவர் அதனை செய்தார்,ஆனால் ஓடிய வேகம காரணமாக எல்லைகோட்டை கடந்தார். ஆளால் அவரின் பின்னால் பந்தை துரத்திக்கொண்டு வந்த ரகானே பந்தை எடுத்து எறிந்தார். அவர்களது கூட்டு முயற்சியால் ஓரு ரன் னை கட்டுப்படுத்தினர்.

அதுவரை இந்த உலககிண்ண போட்டிகளில் இந்தியாவின் களத்தடுப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதற்கு இந்தியவேகப்பந்து வீச்சாளர்கள் ஓரு உதாரணம். 2011 இல் இந்திய அணியில் ஜாகீர்கான், முனாவ் பட்டேல், நெஹ்ரா போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர்.அவர்களை மாத்திரம் களத்தடுப்பின் போது மறைத்துவைப்பதற்கு இந்திய அணி மிகுந்த சிரமப்படவில்லை,சச்சின்ஈ சேவாக் போன்றவர்களும் அந்த தொடரில் சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபடவில்லை.அந்த அணியிலிருந்த பலரால் தூரத்திலிருந்து துல்லியமாக எறியமுடியாமலிருந்தது.

கட்ச்களை விட்டால் டோனி தனது உணர்வை நேரடியாக வெளிப்படுத்த மாட்டார்.ஆனால் தனது குளொவ்ஸ்களை சேர்த்து ஏமாற்றத்தில் தட்டுவார்.களத்தடுப்பில் தேவையற்ற ஒரு ஓட்டத்தை வழங்குவதையும் வெறுப்பவர் அவர்.பல வருட நெருக்கடிகளுக்கு பிறகு இந்த அணி அவரது இறுக்;கமான நிலையை தளர்த்தியுள்ளது. அவர் அதற்காக இந்த அணிக்கு நன்றி தெரிவிக்கின்றார்.

இவ்வாறான களத்தடுப்பு அணி இருக்கும்போது நாங்கள் பெறும் ஓட்டத்துடன் 15 ஓட்டங்களை நீங்கள் சேர்க்கவேண்டும்,ஓரிருவர் ஏனையவர்களை விட வேகம் குறைந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அதன் அர்த்தம் அவர்கள் திறமை குறைந்தவர்கள் என்பதல்ல,நாங்கள் மிகச்சிறந்த களத்தடுப்பாட்ட வீரர்கள் சிலரை கொண்டுள்ளோம், இது தவிர ஓரளவிற்கு வேகமாக களத்தடுப்பில் ஈடுபடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர் என்கிறார் எம் எஸ்.

206635
தற்போது எந்த களத்தடுப்பாட்ட வீரரை எங்கு நிறுத்தவேண்டும் என்பது குறித்து எனக்கு கவலையில்லை,தற்போது எனக்கு அதனை விட தந்திரோபாயங்கள் குறித்து சிந்திக்க முடிகின்றது.இது என் மீதான அழுத்தங்களை குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்திய அணியின் களத்தடுப்பு எதிhகாலத்தில் மேலும் மெருகுபெறும்,உடற்தகுதி விடயத்தில் அதிக கவனம் எடுக்க இது நடைபெறும் என்கிறார் டோனி.