செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் கேரள கஞ்சா தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்தும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல்ளை கண்டறிந்துள்ளனர்.

யாழ், கொடிகாமம் பகுதியில் 95 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய மூன்று மூடைகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள போதைப்பொருள் ஒழிப்புப் பணியக உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ஏ_9 வீதியின் உசன் ரயில் கடவைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியொன்றில் கேரள கஞ்சா அடங்கிய மூன்று மூடைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் மோட்டார் சைக்கிளொன்றை கைவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

n10