செய்திகள்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் பலர் இங்கு வர விரும்பவில்லை : அமைச்சர் சுவாமி நாதன்

யுத்தக் காலத்தில் இந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ் அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கவே விருப்பம் தெரிவிப்பதாக மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் 35 வீதமானோரே இங்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மற்றையவர்கள் இங்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றார்கள் இல்லை. இங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்துவதாக தெரிவித்தே அவர்கள் இங்கு வர விரும்பவில்லைலயென தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் அவ்வாறான விசாரணைகளை கட்டுப்படுத்துவதற்கு முடிந்த வரை நாம் நடவடிக்கையெடுப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.