செய்திகள்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களை சந்தித்தார் மஸ்தான் எம்.பி

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை அகதிகளை  வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் நேரில் சென்று சந்தித்தார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் இம் மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அம் மக்கள் தாயகம் திரும்பிய பின்னர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

இதேவேளை தாம் எதிர்கொள்ளும் இன்னல்கள் தொடர்பில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எடுத்துரைத்ததுடன் தமது பிரஜாவுரிமை பிரச்சனை தொடர்பிலும் தெரிவித்திருந்தனர். இதனை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் இருந்த அகதிகளை சகல வசதிகளுடன் மீள்குடியேற்றுவதாக அமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் அது சாத்தியமற்ற நிலையில் காணப்படுவதாக அம் மக்களிடம் நேரடியாக தெரிவித்திருந்ததுடன், இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தர முயற்சியெடுப்பதாக தெரிவித்தார்.

DSC08976

N5