செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 540 பேருக்கு கொரோனா தொற்று 17 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரசுக்கு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 5,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரசுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.(15)