இந்தியாவில் நள்ளிரவில் உணரப்பட்ட நிலஅதிர்வு
நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவின் வடமாநிலங்களான அஸ்ஸாம், டெல்லி, பீகார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிரவு உணரப்பட்டது.
இதனிடையே, இந்தியாவில் நில அதிர்வில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.