செய்திகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி காஷ்மிர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்: பொன்சேகா யோசனை

இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், “இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர தப்பான அபிப்பிராயத்தையும், சந்தேகங்களையும் கைவிட்டு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வை காண வேண்டும். இதன்மூலம் சர்வதேச விடயங்களை இரண்டு நாடுகளுக்கும் கவனிக்க முடியும்.

இதன்மூலம் இரண்டு நாடுகளும் அயலவர் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். தீவிரவாதிகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டாலும் உலகை தமது கட்டுக்குள் கொண்டு வரவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

எனவே ஒவ்வொருவரும் தமக்கிடையிலான பிரச்னைகளை அவசரமாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்றார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி குறிப்பிட்ட பொன்சேகா, முஸ்லிம் நாடுகள் இந்த இயக்கத்தின் வலையில் வீழ்ந்து விடாது என்றார்.