செய்திகள்

இந்தியாவை அரவணைத்து செயற்படுவதற்கு முன்மொழிந்து இலங்கையை ஆச்சரியமடைய வைத்த சீனா

இலங்கையில் சீனாவின் பாரிய அளவிலான செயற்திட்டங்கள் தொடர்பில் இந்தியாவின் கவலைகளை போக்கும் வகையில் பிராந்திய ஒத்துழைப்பில் இந்தியாவை ஒரு முக்கிய கூறாக ஏற்றுக்கொள்ளும் சீனாவின் முன்மொழிவை இலங்கை ஆதரித்துள்ளதாக இந்தியாவின் பி.ரி. ஐ செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் இந்த முன்மொழிவு இலங்கையை ஆச்சரியம் அடைய வைத்ததாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்றபோது அவருடனான சந்திப்பில், சீன ஜனாதிபதி, ” ஏன் இந்தியாவை எம்முடன் இணைத்து வேலை செய்யக்கூடாது ” என்று கேட்டதாகவும், இதனை மைத்திரிபால சிறிசேன உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்த ரவி கருணாநாயக்க, தெற்காசியாவில் சீனாவின் செயற்பாடுகள் தொடர்பிலான சமன்பாட்டில் இந்தியாவையும் இணைத்துக் கொள்வது என்று இரு நாடுகளும் இணங் கியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தெற்காசியாவில் சீன- இந்திய ஒத்துழைப்பு தொடர்பில் பெய்ஜிங்கும் புதுடில்லியும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.